கடந்த 15 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கரைக்குகுத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.