நெதர்லாந்தில் ஆரம்பித்து 5 நாடுகளை கடந்து தற்போது சுவிசு நாட்டில் ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. பெரும் இயற்கையின் கடுமையான கால நிலையிலும் கொட்டும் மழை மற்றும் குளிர் காற்றிலுமாக சவால் நிறைந்த புவிச்சூழலிலும் இவ்வறவழிப்போராட்டம் பயணிக்கின்றது.
இன்று (15/09/2022) காலை தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவோடு அகவணக்கம் செலுத்தி தொடர்ந்த ஈருருளிப்பயணம் சுவிசு,பேர்ன் மாநிலத்தினை இயற்கையோடு போராடி அண்மித்தது . சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு புரிந்த தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வு என இடித்துரைத்தபடி இப்பயணம் பல அரசியற் சந்திப்புக்களை மேற்கொள்கின்றது. அதாவது 51வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறிலங்காப் பேரினவாத அரசிற்கு மேலும் காலக்கெடு கொடுக்க் கூடாது, விரைவாக அனைத்துலக சுயாதீன விசாரணைக்காக (ICC) சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் . இதனையே 2021ம் ஆண்டில் ஐக்கிய நடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்தாக இருந்தது. அவற்றினை சர்வதேச நாடுகள் அமுல்ப்படுத்த வேண்டும். எனவே ஆவன செய்வதற்கான வழிமுறையாக அறவழிப்போராட்டங்கள் முக்கியம் பெற்று நிற்கின்றன. நாம் கொண்ட இலட்சிய நோக்கம் புனிதமானது சிறிலங்கா பேரினவாத அரசினை காப்பாற்ற அடிவருடிகள் முயற்சி செய்தாலும் தமிழீழ மக்களின் தொடர் போராட்டமே எமது நீதியையும் விடுதலையினையும் நிர்ணயிக்கும். எனவே எதிர்வரும் 19/09/2022 திகதி ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் பி.ப 2 மணியளவில் பெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது. அனைவரும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டம்”
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணா
“ ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது “
- தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.