கடும் பனிப்பொழிவு – பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

  • Post author:
You are currently viewing கடும் பனிப்பொழிவு – பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பலுசிஸ்தானில் பனிப்பொழிவு, கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தன. கடும் பனிப்பொழிவால் வீடுகள் மேற்பரப்பில் அதிகளவில் பனி இருந்ததால் பாரம் தாங்காமல் வீட்டின் கூரை இடிந்து விழுந்தும் கடும் பனிப்பொழிவில் சிக்கியும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 111 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பனி பொழிவால் நீலம் பள்ளத்தாக்கில் 73 பேர் பலியாகியுள்ளனர். பலுசிஸ்தானின் 31 பேரும். பஞ்சாப் மாவட்டத்தில் உள்ள சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் 7 பேர் என மொத்தம் 111 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வடக்கே உள்ள மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அங்கே செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள