ஐரோப்பாவில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி, கடந்த 500 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது மிக மோசமானது என் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் நீர்நிலைகளும், நதிகளும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் புகழ் பெற்ற “தேம்ஸ்” நதியும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் நுகர்பொருட்களுக்கான போக்குவரத்து, பெரிதும் நீர்வழியூடாகவே நடைபெற்றுவரும் நிலையில், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் நீர்வழிகளில் நீர்நிலையின் உயரம் குறைந்துள்ளமை, போக்குவரத்துக்களில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.