சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்தார்.
இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அகில இலங்கை இளைஞர் அமைப்பின் உப தலைவர் சட்டத்தரணி தினேஷ் தலைமையில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.





