சிறிய ரக விமானம் ஒன்று வர்த்தக கட்டிடத்தில் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது.
விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எட்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டதாக ஃபுல்லர்டன் காவல் துறை அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.