கட்டைக்காடு கடலில் சட்டவிரோதமாக கடற்றொழிலாளரின் அட்டகாசம்!

You are currently viewing கட்டைக்காடு கடலில் சட்டவிரோதமாக கடற்றொழிலாளரின் அட்டகாசம்!

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடலில் சற்றுமுன் வரை 50 மேற்பட்ட படகுகள் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (18.03.2025) மாலை 5.30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அருகில் இருந்து சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகள் ஒளிவைத்து பல்லாயிரக்கணக்கான மீன்களை பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வடமராட்சி – கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் குறித்த விடயத்தை கடற்படையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்

இருப்பினும், கடற்படையினர் அது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுக்காது, போதைப்பொருளை மட்டும் கைப்பற்றும் நோக்கில் செயற்படுவதாகவும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை இதுவரை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்படை முகாமிற்கு அருகாமையில் இருந்து சட்டவிரோதமாக கடற்றொழிலுக்கும் தொழிலாளர்கள் கைது செய்யப்படாமை குறித்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply