கட்டைப்பறிச்சான் தெற்கு இறால் பாலம் உடனடியாகப் புனரமைக்கப்படல் வேண்டும்.

You are currently viewing கட்டைப்பறிச்சான் தெற்கு இறால் பாலம்  உடனடியாகப் புனரமைக்கப்படல் வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் கட்டமைப்பறிச்சான் கிராமத்திலுள்ள இறால் பாலம் அமைக்கப்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ளது. அப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து உரியமுறையில் திருத்தப்படவில்லை. அதன் காரணமாக பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதி உடனடியாகத் திருத்த நடவடிக்கை எடுக்கபடல் வேண்டுமென வலியுறுத்தி எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றினை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளதுடன் அதன் பிரதிகள் பிரதம செயலாளர் கிழக்கு மாகாணம் பிரதம பொறியியலாளர் வீதி அபிவிருத்தித் திணைக்களம் கிழக்கு மாகாணம் ஆகியோரது நடவடிக்கைகளுக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2025.01.09

கௌரவ. கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன
கௌரவ அமைச்சர்
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

கட்டைப்பறிச்சான் தெற்கு இறால் பாலம் (சின்னப்பாலம்) உடனடியாகப் புனரமைக்கப்படல் வேண்டும்.

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்மைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக இவ் இறால்ப் பாலம் அமைந்துள்ளது. வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமானதும் சுமார் 125 மீற்றர்கள் நீளமானதுமான இப்பாலமானது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கிறீற் குழாய்கள் பொருத்தப்பட்டு அமைக்கப்பட்டதாகும்.

மூதூரிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் மிகப் பழமையானதும் அதிகளவு மக்களது பயன்பாட்டில் உள்ளதுமான பழைய மட்டக்களப்பு வீதியிலேயே இப்பாலம் அமைந்துள்ளது. சேருவிலஇ தோப்பூர்இ பாட்டாளிபுரம்இ நல்லூர்இ மலைமுந்தல்இ பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராம மக்கள்இ பாடசாலை மாணவர்கள்இ வியாபாரிகள்இ அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் தினமும் இப்பாலம் ஊடாகவே அடிக்கடி மூதூருக்கும் ஏனைய பல பகுதிகளுக்குமான பிரயாணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். கட்டைப்பறிச்சான்இ சேனையூர்இ கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சந்தனவெட்டைஇ அறபாநகர்இ அம்மன்நகர்இ கணேசபுரம் ஆகிய இடங்களிலுள்ள நெல்வயல்கள்இ குளங்கள்இ சேனைப்பயிர்ச் செய்கை நிலங்கள் மற்றும் காட்டுப்பகுதிகளுக்குச் செல்லும் பாதையிலுள்ள மிக முக்கிய பாலமாகவும் கட்டைப்பறிச்சான்இ சேனையூர் பகுதி மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கான பிரதான பாதையாகவும்இ மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 3000 திற்கும் அதிகமான மக்களது பயன்பாட்டிலுள்ள பொது மயானம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்குச் செல்லும் பிரதான வழியில் இப்பாலம் அமைந்துள்ளது.

இவ்வாறான மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இவ் இறால் பாலமானது கடந்த 20 வருடங்களாக திருத்தப்படாத நிலையில் மோசமாகப் பாதிப்படைந்த நிலையிலுள்ளது. இதனூடாகப் பயணிக்கும் மக்களது உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியளவுக்கு இப்பாலம் சிதைவடைந்த நிலையிலுள்ளது. இப்பாலம் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் பாலத்திற்கு மேலாக சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு ஆற்றுநீர் மட்டம் உயர்ந்து பாய்கின்றது. இதனால் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதுடன்இ இதனூடாகப் பயணிக்கும் மாணவர்கள் பாதுகாப்புக்கருதி அடிக்கடி பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. மேலும் கால்நடைகள் அதிகளவில் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளன. விவசாயம்இ வியாபாரம் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது. ஓட்டுமொத்த மூதூர் பிரதேச மக்களதும் பொருளாதாரம் கல்விஇ விவசாயம்இ வர்த்தகம் மற்றும் அரச தொழில் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பாலத்தின் பயன்பாடு உள்ளது.

மேற்படி நிலைமைக்களைக் கருத்திற் கொண்டு இப்பாலத்தினை சிறந்த திட்டமிடலுடன் புனரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply