கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் அகப்பட்ட கள்ளன்!

You are currently viewing கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் அகப்பட்ட கள்ளன்!

யாழில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான கண்காணிப்பு ஒளிப்பதிவு காணொளிகளை சிறீலங்கா காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தின் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளில் வந்து பகலிலும் அதேபோன்று இரவு நேரங்களிலும் முகமூடிகள், கையுறைகள் அணிந்து அடையாளம் காண முடியாதவாறு வீடுகளுக்குள் உட்குகுந்து தொடர் திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அவை தொடர்பில் தீவிர விசாரணைகளை சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், சில தினங்களிற்கு முன்னர் வீடொன்றில் பதிவான கண்காணிப்பு ஒளிப்பதிவு காணொளிகளில் குறித்த நபரின் முகமூடி கழன்றிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இதனால் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு கேட்டுள்ள சிறீலங்கா காவற்துறையினர், அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments