நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கத்திக்குத்து சம்பவமொன்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சம்பவ இடத்துக்கு சென்ற ஒஸ்லோ காவல்துறையினரில் பலர் “கொரோனா” தொற்று இருக்கலாமென்ற அச்சத்தில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினருக்கு, தாங்கள் கைது செய்தவர்களில் ஒருவர், “கொரோனா” தொற்று இருக்கலாமென்ற சந்தேகத்தின் காரணமாக தனிமையில் வைக்கப்பட்டிருந்தவர் என்ற தகவல் தாமதமாகவே தெரிய வந்ததாகவும், இதனால், கைது செய்யப்பட்ட அந்த குறித்த நபரை, தனிமைப்படுத்தலை மீறிய குற்றத்துக்காகவும் சேர்த்தே கைது செய்யவேண்டி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த நபரை கைதுசெய்வதில் ஈடுபட்ட காவல்துறையினர் இப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.