கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் 5 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி 73 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாணத்தில், ரொறன்ரோவுக்கு 18 மைல் வடக்கே அமைந்துள்ள Vaughan நகரில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல்தாரி பொலிசார் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில், பொலிசாருடனான மோதலில் தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியின் அடையாளத்தை காவற்துறையினர் வெளியிட்டனர்.
புறநகர் ரொறன்ரோ காண்டோமினியம் கட்டிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொன்ற நபர் 73 வயதான பிரான்செஸ்கோ வில்லி என காவற்துறையினர் தெவித்தனர்.
பிரான்செஸ்கோ வில்லி, தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் தனக்கு அநீதி இழைத்ததாக உணர்ந்த காண்டோ வாரிய உறுப்பினர்களை பழிவாங்க வன்முறை வெறியாட்டத்தை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வில்லி 2020-ல் வாரியத்தின் ஆறு இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார், குழு உறுப்பினர்கள் “2010 முதல் குற்றம் மற்றும் குற்றச் செயல்களைச் செய்தார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
இறந்தவர்களில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர், அவர்களில் மூன்று பேர் காண்டோ வாரிய உறுப்பினர்கள். மற்றொரு பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்