கனடாவில் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்புக்கு அந்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழரும் வணிக நிர்வாகியுமான ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன் ஆகியோர் 1 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ரோய் ரத்னவேல், 1969ஆம் ஆண்டு யாழ்.வடமராட்சியில் பிறந்தார்.
17 வயதில் அவர் ஒரு அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் கனடா சென்றார்.
தற்போது கனடாவின் மிகப்பெரிய சுயாதீன சொத்து மேலாண்மை நிறுவனத்தில் ஒரு நிர்வாகியாக அவர் உள்ளார்.
இந்நிலையில், கனடாவில் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தேவைப்படும் ஆதரவை வழங்க ரோய் ரத்னவேல் முன்வந்துள்ளார்.