கனடா Torontoவில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திருமதி லில்லிமலர் தம்பிராஜா (வயது 80) என்ற தமிழ் மூதாட்டி நேற்றுமுன்தினம் 05.04.2020 (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் உரும்பிராயைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது இறப்புக்கு, கொரோனா வைரஸ் காரணமாக இருந்துள்ளதை மருத்துவ சாட்சிப்பத்திரம் உறுதிப்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
