கனடாவில் தொற்று 90 ஆயிரத்தை தாண்டியது! – 7 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு.

You are currently viewing கனடாவில் தொற்று 90 ஆயிரத்தை தாண்டியது! – 7 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று 90 ஆயிரத்தையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

இதுவரை கனடாவில், 90,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 7,073 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான 48,103 பேர் குணமடைந்துள்ளனர்.

கியூபெக்கில் மாத்திரம், 50,651 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். அங்கு 4,439 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒன்ராறியோவில் 27,533 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும், 2247 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பகிர்ந்துகொள்ள