கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் தமிழின உரிமைக்காக குரல் கொடுத்த மாணவி!

You are currently viewing கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் தமிழின உரிமைக்காக குரல் கொடுத்த மாணவி!

கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை இன அழிப்பு படையினரை கடுமையாக சாடியுள்ளார்.

சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார்.

எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பலஸ்தீனத்தில் தற்பொழுது இதே நிலைமை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரிகா சட்டக் கல்லூரியின் கட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிக்கா போன்று ஒவ்வொரு தமிழ் மாணவர்களும் உலகத்தில் எந்த நாட்டில் படித்து பட்டம் பெற்றாலும் தமிழினத்தின் உரிமைக்காக குரல் கொடுத்தால் நிச்சயமாக இந்த உலகத்தின் இதயத்தை அசைக்க முடியும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments