கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான விசாக்களை பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.