இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிய மூத்த கனேடிய இராஜதந்திரி ஒருவரை நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது.
இந்தியாவுக்கான கனடா தூதுவரை இன்று அழைத்த இந்திய அரசு இந்த தகவலை அவரிடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாகவும், இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை அவர் ஊக்குவிப்பதாகவும் இந்தியா அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
காலிஸ்தான் குழுவினரின் செயற்பாடுகள் கனடாவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஜுன் மாதம் காலிஸ்தான் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையை இந்தியாவே செய்ததாக கனேடிய பிரதமர் கடந்த திங்கட்கிழமை (18) குற்றம் சுமத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கனடா தூதரகத்தில் பணியாற்றிய இந்திய இராஜதந்திரியான பவன்குமார் ராஜ் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்