கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு!

You are currently viewing கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு!

கனடா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட ரொறன்ரோ குடும்பத்தினருக்கு திங்கட்கிழமை இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பகல் 10 மணியளவில் ரொறன்ரோவில் வசித்துவந்த இந்திய குடும்பத்தினருக்கு பிரதான சாலை 27 Belfield சாலையில் அமைந்துள்ள இறுதிச்சடங்கு மையத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

தொண்டு நிறுவனம் ஒன்று இறுதிச்சடங்குகளுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களில் சௌதாரி குடும்பத்தினரும் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் இறந்தனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முடன்றதில், விபத்தில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளனர். சௌதாரி குடும்பம் ஏன் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டது என்பது தொடர்பில் மர்மமாகவே உள்ளது.

மேலும், தண்ணீர் என்றாலே மரண பயம் கொண்ட பிரவீன் எவ்வாறு படகு பயணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்பதும் புதிராக இருப்பதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பிரவீன் படகு பயணம் மேற்கொண்டதே இல்லை எனவும், இந்தியவில் குடும்பத்தினர் மேற்கொண்ட பயணம் ஒன்றின் போதும் அவர் படகு சவாரிக்கு மறுத்ததாக அந்த உறவினர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் அவர்கள் மகிழ்ச்சியுடனே காணப்பட்டனர் எனவும், ஆனால் திடீரென்று அவர்கள் அமெரிக்கா செல்ல திட்டமிட்டதன் பின்னணி தங்களுக்கு தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்லார்.

மட்டுமின்றி, அமெரிக்காவில் சென்று வாழ்க்கையை முன்னெடுக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை எனவும், கனடாவிலேயே அவர்கள் நிம்மதியான வாழ்க்கை நடத்தியதாகவும் அந்த உறவினர் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply