கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர்.
இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வு ஆரம்பமாகின.
இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பலர் நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர்.
நிகழ்வில் பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றாரியோ மாகாண சபை, கியூபெக் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரம்டன் நகரசபை உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
