கனடாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 நிகழ்வுகள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து வணக்கம் செலுத்தினர்.






கார்த்திகையில் நாம் கண் கரைந்து காத்திருப்பது காலம் கனியும் என்பதற்காகவே கரைந்த கண்களோடு கன காலம் இல்லை – என்று உறங்கும் வீரருக்கு உறுதி சொல்லும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்வுகள் லண்டன் எக்ஷல் மண்டபத்தில்ஆரம்பமாகியது
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பிராந்திய செயற்பாட்டாளர் திரு கிருஷ்ணசாமி ஞானச்சந்திரா அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். பிரித்தானிய தேசியக்கொடியினை தமிழ் இளையோர் அமைப்பு சமூகப் பணிப் பிராந்திய பொறுப்பாளர் கோபிதா விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு பொன் மகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கதோடு தேசியத்தலைவரின் சிந்தனை வரிகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை ஏற்றி உறுதியுடன் நினைவேந்தினார்கள்

























