கனடா பிலிப்பைன்ஸ் மக்களின் தெருக்கொண்டட்ட நிகழ்வில் வாகனவிபத்து பலர் பலி!!

You are currently viewing கனடா பிலிப்பைன்ஸ் மக்களின் தெருக்கொண்டட்ட நிகழ்வில்  வாகனவிபத்து பலர் பலி!!

கனடாவில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணியளவில், நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் சமூகத்தின் கொண்டாட்டமான லாபு லாபு தினத்தின் போது ஒருவர் கொண்டாட்ட நிகழ்வுக்குள் வாகனத்தை ஒட்டியதால் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் வான்குவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டுநர் முன்பிருந்தே காவற்துறையினருக்கு தெரிந்தவர் என்று துணை காவற்துறை தலைவர் ஸ்டீவ் ரை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உறுதிப்படுத்தினார். இதேவேளை இது பயங்கரவாத தாக்குதலும் இல்லையென காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் பிலிப்பைன்ஸ் மக்களின் தெருக்கொண்டட்ட நிகழ்வில் இப்படியொரு அனர்த்தம் நிகழ்ந்திருப்பதை கண்ணால் கண்டவர்கள் கனத்த இதயங்களோடு தங்கள் வலிகளை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply