கனேடிய அரசாங்கத்தின் எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்!

You are currently viewing கனேடிய அரசாங்கத்தின்  எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்!

கனடாவில் (Canada) இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதல்ல என கனேடிய அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது.

சுமார் 178,662 அமெரிக்க டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது, ஸ்பேனிஷ் உட்பட 11 மொழிகளில் இந்த எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின், அரசியல் தந்திரம் என ஒரு சில தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறித்த விளம்பரத்தில், கனடாவில் இனி புகலிடம் கோருவது எளிதல்ல. தகுதி பெற கடுமையான வழிமுறைகள் உள்ளன. முடிவெடுக்கும் முன்னர் அவை குறித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே, புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்புக்களை அதிகம் வழங்கி வரும் கனேடிய அரசாங்கம், தற்போது புலம்பெயர் மக்களை உள்வாங்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன் டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு தற்காலிகமாக குடியேறும் மக்களையும் தடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply