கனேடிய பிரதமரின் பதவி விலகலை அதனை கொண்டாடும் வகையில் விசேட தள்ளுபடி!

You are currently viewing கனேடிய பிரதமரின் பதவி விலகலை அதனை கொண்டாடும் வகையில் விசேட தள்ளுபடி!

கனேடிய  (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலகியதாக அறிவித்ததையடுத்து அதனை கொண்டாடும் வகையில் அந்நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்று விசேட தள்ளுபடியில் பர்கர்களை வழங்கி கொண்டாடியுள்ளது.

இதன்படி, குறித்த ஹோட்டலில் 2 டொலர்களுக்கு பர்கர்களை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த விளம்பர பலகையில், ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலை கொண்டாடுவதற்காக 2 டொலர் விசேட பர்கள் விற்பனை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பர புகைப்படத்தை நபர் ஒருவர் தனது, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், அவர் குறித்த புகைப்படமானது வடிவமைக்கப்பட்டது அல்ல எனவும், அது உண்மையான விளம்பரம் என்பதை தான் உறுதிபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த விளம்பரம் பலர் மத்தியில் பகிரப்பட்டு வருவதுடன் தாங்கள் அங்கே செல்லவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கனடாவின் (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது பதவியில் இருந்து விலகியமையை வரவேற்கும் வகையில் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் (Elon Musk) செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

சர்வதேச தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளையும் மாற்றங்களையும் குறிக்கும் வகையில் அந்த பதிவு இடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply