கனேடிய பிரதமருக்கு பிரான்ஸில் மகத்தான வரவேற்பு!

You are currently viewing கனேடிய பிரதமருக்கு பிரான்ஸில் மகத்தான வரவேற்பு!

அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்திருக்கும் சூழலில் பிரான்ஸுக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னிக்கு பிரான்ஸில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் புதிய பிரதமராகக் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்ற மார்க் கார்னி தமது முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்தார். அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரன் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியோடு மகத்தான வரவேற்பை அளித்துள்ளார்.

ஜனாதிபதி மக்ரனுடன் இணைந்து எலிசி அரண்மனையில் கூட்டு செய்தியாளர் மாநாடொன்றிலும் அவர் பங்குபற்றியுள்ளார். பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பக்கம் கனடா இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மக்ரன் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply