கப்பலில் மறைந்து வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 4 தமிழ் இளைஞர்கள் கைது!

You are currently viewing கப்பலில் மறைந்து வெளிநாட்டுக்குத் தப்பிக்க முயன்ற 4 தமிழ் இளைஞர்கள் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வர், காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமானாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் இவர்கள் என தெரிய வருகிறது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி சந்தேகநபர்கள் குழு மறைந்திருந்துள்ளது. கப்பல் பயணிக்கத் தொடங்கிய நிலையில் கப்பலின் கப்டன், சூயஸ் கால்வாய் அருகே இந்த சந்தேக நபர்களை கவனித்தார்.

கப்பலின் கப்டன் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்து சந்தேக நபர்களை இலங்கைக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு வரும் மற்றுமொரு கப்பலில் சந்தேகநபர்கள் ஏற்றி விடப்பட்டதாகவும், குறித்த கப்பல் சந்தேகநபர்கள் நால்வரையும் காலி துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply