கமலா ஹரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கறுப்பின பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதோடு அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ், பல வருடங்களாக தனது ஆசிய பின்னணியை மறைத்து வைத்திருந்தார் என டிரம்ப் பிழையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
சில வருடங்களிற்கு முன்னர் அவர் கறுப்பாக மாறும்வரை அவர் கறுப்பினத்தவர் என்பது எனக்குதெரியாது என கூறிய டிரம்ப், அவர் தன்னை தற்போது கறுப்பினத்தவர் என கருதவேண்டும் என விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர் கறுப்பினத்தவரா இந்தியரா என்பது எனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் கமலா ஹரிஸ் தனது சட்டத்துறை வாழ்க்கையின் ஆரம்பத்தில் பரீட்சைகளில் தோல்வியடைந்தார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.