கமலா ஹாரிஸின் முகத்தை அம்பலப்படுத்த இருப்பதாக டொனால்டு ட்ரம்பின் கட்சி திட்டம்!

You are currently viewing கமலா ஹாரிஸின் முகத்தை அம்பலப்படுத்த இருப்பதாக டொனால்டு ட்ரம்பின் கட்சி திட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் பல மாகாணங்களில் ட்ரம்புக்கு எதிராக வலுவான செல்வாக்குடன் கமலா ஹாரிஸ் முன்னேறி வருவதாகவே புதிய கருத்துக்கணிப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஆனால், முகம் முழுக்க புன்னகையுடன், அனைவரையும் வசப்படுத்தும் பேச்சுக்கு சொந்தக்காரரான கமலா ஹாரிஸ் அல்ல, அவருக்கு கீழ் பணியாற்றியுள்ள ஊழியர்களின் அனுபவம்.

துணை ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த பின்னர் முதல் ஆண்டில் அவர் தமது அலுவலகத்தில் பணியமர்த்திய 71 ஊழியர்களில் தற்போது நால்வர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

எஞ்சிய அனைவரும் ஹாரிஸால் வெளியேற்றப்பட்டனர் அல்லது வேலையை விட்டுவிட்டு அவர்களே வெளியேறினர். வெளியேறியவர்கள் அனைவருக்கும் கமலா ஹாரிஸின் நடவடிக்கைகள் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

2010 காலகட்டத்தில் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் பொறுப்புக்கு வந்த கமலா ஹாரிஸ் தமது அலுவலகத்தை ஒரு நரகம் போலவே முன்னெடுத்துள்ளார். அவரது அலுவலகத்தில் பயிற்சிக்கு சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அழுகையுடனே திரும்பியுள்ளனர்.

எதற்கும் தகுதியற்றவர்கள் என்ற மனநிலையை கமலா ஹாரிஸ் தங்களில் உருவாக்குவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 2017ல் கலிபோர்னியா செனட்டராக தெரிவான பின்னரும், அவரது நடவடிக்கையில் மாற்றமேதும் ஏற்படவில்லை என்றே ஆய்வு செய்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2017 முதல் 2020 வரையான ஆண்டுகளில் அவரது அலுவலகத்தில் இருந்து வேலையைவிட்டு வெளியேறியவர்கள் சதவிகிதம் என்பது மிக மிக அதிகம் என்றே கூறுகின்றனர்.

2020ல் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய ஹாரிஸுக்கு அவரது குணம் மக்களிடையே கசிந்ததை அடுத்தே கடும் சரிவை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. கமலா ஹாரிஸின் இதுவரை வெளிவராத முகத்தை அம்பலப்படுத்த இருப்பதாக டொனால்டு ட்ரம்பின் கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments