யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 49 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்,போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆலய திருவிழா ஒன்றில் பங்குகொண்ட பெருமளவானவர்களுக்கு கரவெட்டியில் நேற்று பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.
தொற்றாளர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விரிவான தகவல் விரைவில் உறுதி செய்யப்படுமென தெரியவருகின்றது.
இதேவேளை
வல்வெட்டித்துறை
யாழ். வடமராட்சி பருத்தித்துறை நகரில் மேலும் ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை நகரில் வர்த்தக, வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு இன்று காலை முதல் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியா பழைய பேரூந்து நிலைய கடைத் தொகுதியில் 25 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா பழைய பேரூந்து நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன.