மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி அனைத்து மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கருப்பு பூஞ்சை பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 40,845 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34,940 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
18 – 45 வயது வரை உள்ள 13,083 பேருக்கும், 45 – 60 வயது வரை உள்ள 17,464 பேருக்கும், 60 வயதுக்கு மேல் 10,082 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.