கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை – சிறப்பு கட்டுரை

You are currently viewing கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை – சிறப்பு கட்டுரை

தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே, 

தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே…

– புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்.

கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை

அன்னை  மடியில்  குழந்தையாய்  அறிந்து  கற்ற  முதல்  மொழி  தாய்மொழி. தாயானவள்  குழந்தைக்கு    உணவூட்டுவதோடு  உணர்வையும்  ஊட்டுகின்றாள். அதற்கு  பயன்படுத்துவது  தாய்மொழியே. “தாயிற்சிறந்ததொரு  கோவிலுமில்லை”என்பது  போல “தாய்மொழியிற்  சிறந்த  வேறு  மொழியில்லை.  என்பது அறிஞர்களின்    கருத்தாகும்.    ஒருவன்    எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்   அது   தவறில்லை   எனினும்   அறிவு   வளர்ச்சிக்கு தாய்மொழியே அடிப்படையானது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தாய் மொழி மூலம் கல்வி பயிலும் குழந்தை தனது இயல்பூக்கங்களிற்கு ஏற்ப பூரண  திறன்களை  வெளிக்காட்ட   முடியும்  என்பது  கல்விஉளவியல் அறிஞர்களின்  கருத்தாகும். 

இதனால்  தான்  தாய்மொழி  மூலம்  கல்வி  புகட்ட வேண்டும்  என்று  வலியுறுத்தப்படுகின்றது.  இன்று  உலகஅரங்கில்  வளர்ச்சி பெற்ற  நாடுகளான அமெரிக்கா,  இங்கிலாந்து,  பிரான்ஸ்,  ஜேர்மனி,  ரஸ்யா, ஜப்பான்,  கனடா  போன்ற  நாடுகள்  தத்தம்  சுயமொழி  மூலமே  கல்வி புகட்டுகின்றன.தாய்மொழிமூலம்   கல்விபயின்ற   நிபுணர்களையும் விஞ்ஞானிகளையும்  பெருமளவில்  கொண்டுள்ளன. 

தாய்மொழி  மூலம்  கல்வி பயின்றமையினாலே    இவர்கள்    புதிய    புதிய    கண்டுபிடிப்புக்களை கண்டறிந்துள்ளனர். தாய்மொழி  மூலம்  கல்வி  பயில்வதே  சிந்தனை  வளர்ச்சிக்கு  துணை  புரியும் என்பதை  இது  நன்கு  புலப்படுத்துகின்றது.  வளர்முக  நாடுகள்  பலஇன்று பொருளாதார  நிலையில்  பின்தங்கி  இருப்பதற்கு  முக்கிய  காரணம்  அவை வளர்ந்த  நாடுகளால்  அடிமைப்படுத்தப்பட்டு வளங்கள்  சுரண்டப்பட்டமையே. ஆங்கில  மொழியே  உயர்கல்விக்கு  ஏற்ற  மொழி,  தாய்மொழி  மூலம்எதுவும் சாதித்து  விட  முடியாது  என்று  சிலர்  கூறுகின்றனர். 

ஆனால்  ஆங்கில  மொழி மூலம்  கல்வி  பயின்றோரிலும்  பார்க்க  தாய்மொழி  மூலம்  பயின்றோரே  இன்றுஉலகின்   சிறந்த   விஞ்ஞானிகளாகவும்   பொருளியலாளராகவும்   மருத்துவ நிபுணர்களாகவும் விளங்குகின்றனர். 1907ல்  பொதுவுடைமை  புரட்சி  மூலம்  ஆட்சி  அமைத்த  சோவியத்  யூனியனும் 1950ல்  பொதுவுடைமை  புரட்சி  மூலம்  ஆட்சி  அமைத்த  மக்கள்  சீனாவும்  2ம் உலகப்போரின்  பின்  உருப்பெற்ற  ஜப்பானின்  பொருளாதாரத்தில்  முன்னணி வகிக்கின்றது  என்றால்  முக்கிய  காரணம்  தத்தம்  தாய்மொழி  மூலம்  கல்வி புகட்டியமை  ஆகும்.  தாய்மொழி  மூலம்  ஒவ்வொருவனும்  பற்றுக்கொள்ள வேண்டும். அப்பற்று  இல்லாதவன்  தாயை  பழித்தவன்  ஆகின்றான். “பெற்ற தாயை காட்டிலும் தாய்மொழி உயர்ந்தது ஆகும்

கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை - சிறப்பு கட்டுரை 1

தாய்மொழியில் கற்பது தாய்ப்பால் பருகுவதைப் போன்றது. பிறமொழில் கற்பது புட்டிப்பால்    பருகுவதைப்    போன்றது.    தாய்ப்பாலே     குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு   உகந்தது.   

அது   போன்று   தாய்மொழியில்   கற்பதே குழந்தையின்  இயல்பான  சிந்தனை  வளர்ச்சிக்கு  ஏற்றது.  எனவே  தாய்மொழி மூலம் கற்பதே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை ஆகும். மேலை   நாட்டினர்   அறிவியல்   துறையில்   முன்னணி   வகிக்க காரணம் அவர்களுக்கு  தேவையான  அனைத்து  நூல்களும்  அவர்களின்  தாய்மொழியில் உள்ளமை   ஆகும்.   தாய்மொழி   வாயிலாக   கல்வி   பெறுதலும்   எல்லா துறைகளிலும்  தாய்மொழியை  பயன்படுத்துவதும்  ஒவ்வொருவரின்  தலையாய கடமையாகும். தாய்மொழி மூலம் பெறப்படும் கல்வியே உள்ளத்தில் அடிபதிந்து அழியாப்   பயன்   நல்கும்.அதுவே   அறிவு   சிந்தனை   வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.   நமது   சமுதாயம்   எழுச்சி   பெறவேண்டுமாயின்   நாடு பொருளாதார  வளத்துடன்  உயர்ந்திட  வேண்டுமாயின்  தாய்மொழிக்  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

தாய்மொழியிலேயே  சிந்திக்க  முடியும்  சிந்திக்கும்  மொழியிலேயே  சிறப்பாக கல்வி  கற்கவும்முடியும்.  அறிந்ததில்  இருந்தே  அறியாததை  கற்றுக்  கொள்ள முடியும்.    உலகெங்கும்   தாய்மொழியில்   கற்றவர்களே   படைப்பாற்றல் மிக்கவர்களாக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மொழியையும் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்.தாய்மொழிக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கமாக தாய்தமிழ் பள்ளிகள் வெற்றிகரமாக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கின்றன. இன்று அரசு தாய் தமிழ்க் கல்வியின் அவசியமறிந்து அதை மேம்படுத்த பெரும் தாய்ப்பாலே  குழந்தைக்கு  நல்லூட்டம்  தருகின்றது  என்கிறது  மருத்துவம். தாய்;ப்பால்   அருந்தாத   குழந்தைகள்   நோய்   எதிர்ப்பு   ஆற்றலை   பெற தவறுகின்றன  என  முன்மொழிகின்றது ஆய்வுகள். தாய் பாலூட்டி  குழந்தையின் உடலை   வளர்க்கிறாள்.   அன்பு   சொரிந்த   உரையாடலுடன்   பாலோடும் உணவோடும்  அங்கே  மொழியும்  ஊட்டப்படுகின்றது.  தாய்ப்பாலை  இழக்கும் குழந்தைகள்  உடல்  நலம்  குன்றும்  அதுபோன்று  தாய்மொழியில்  கற்காத குழந்தையின் அறிவுத்திறன் மங்கும். அறிவியல் இன்று வியத்தகு வளர்ச்சி பெறுகின்றது. அது புதிய கண்டுபிடிப்பாக பேசுகின்றது.  குழந்தை  கருவில்  வளரும்போது  தாயின்  மொழியை  அதாவது தாய்மொழியை  கேட்டு  வளர்கின்றது.  கருவிலேயே  குழந்தையின்  மூளையில் தாய்மொழிப்படிமங்கள் பதியத் தொடங்கி வருகின்றன.

உலகின்  தலைசிறந்த  குழந்தை  உளவியலாளர்களும்  கல்வியியலாளர்களும் இதனை  உறுதிப்படுத்தி  வருகின்றனர்.  குழந்தையின்  தொடக்க  கல்வி  தாய் மொழியில்  தான்  அமைய  வேண்டும்  என்ற  கருத்தை  இதுவரை  எவரும் மறுக்கவில்லை. உலகின்  முன்னேறிய  நாடுகள்  அனைத்திலும்  தொடர்கல்வி  மட்டுமன்றி உயர்கல்வி   ஆராய்ச்சி   கல்வி   என   அனைத்துமே   தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன.  பெரும்பாலான  அறிவியல்  கண்டுபிடிப்புக்கள்  அங்குதான் நிகழ்கின்றன.இந்த  அறிவியல்  உண்மைக்கு  இஸ்ரோ  அறிவியலாளர்களும்  சான்றாக திகழ்கின்றனர்.   விண்ணில்   செயற்கை   கோள்களை   ஏவுவதில்   வல்லரசு நாடுகளும்  மூக்கில்  விரலை  வைத்து  வியக்கும்  வண்ணம்  அவர்கள்  சாதனை புரிந்து  வருவது  யாவரும்  அறிந்ததே.  இச்சாதனைக்கு  அடிப்படை  காரணம் இஸ்ரோ  அறிவியலாளர்களில்  பெரும்பாலானோர்தொடக்க  கல்வியை  அவரவர் தாய்மொழியில் கற்றதே என்கின்றார்

அதன் தலைமை இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.ஐக்கிய  நாடுகள்  கல்வி,  அறிவியல்,  பண்பாட்டு  நிறுவனம்  தாய்மொழிக் கல்வியின்  முக்கியத்துவத்தினை பல்வேறு கொள்கை மற்றும் செயற்றிட்டங்கள் ஊடாக முன்னிறுத்தி வருகின்றது. மொழி    உரிமைகள்    அடிப்படை    மனித    உரிமைகளின்    பாகமாக அமைப்புக்களாலும் சமூகங்களாலும் கருதப்படுகின்றன. சட்ட பிணைப்புஇல்லாத அனைத்துலக மொழிசார் உரிமைகள் தொடர்பான பரிந்துரைகள் தாய்மொழிக் கல்விக்கு   கூடியளவு   ஆதரவு   தரும்   ஆவணங்களாக   அமைகின்றன. அண்மைக்காலமாக  தாய்மொழியில்  கல்வியை  பல்வேறு  ஆபிரிக்க  ஆசிய நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன.ஒருவரின்  தாய்மொழியில்  தேர்ச்சி  பெறுவது  அந்த  மாணனின்  அறிவுணர்வு வளர்ச்சிக்கும்  பொதுவான  கல்வி  பெறுபேறுகளுக்கும்  முக்கியமானது  என்று பல்வேறு  ஆய்வுகள்  கூறுகின்றன எனவே  அறிவு  வளர்ச்சிக்கு  தாய்மொழிக் கல்வி அடிப்படையாகும்.

பகிர்ந்துகொள்ள