கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..!

You are currently viewing கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..!

யாழ்ப்பாணம் (Jaffna)  – வடமராட்சி, கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்கோவளம், வீரபத்திரர் கோவிலடியில் நேற்று முன்தினம் (30.10.2024)  கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் 54 வயதுடைய அவரது மனைவி மேரி ஆகிய இருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நேற்று முன்தினம் இரவும், மற்றொரு சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை வாக்குமூலம் பெறுவதற்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 2025 ம் ஆண்டுக்கான சலவைத் தொழில் ஒப்பந்தத்தை இம்முறை பெற்றதனாலேயே குறித்த இரட்டை கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மூன்று சந்தேகநபர்களும் இன்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பருத்தித்துறை சிறீலங்கா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க தலைமையிலான விசேட பிரிவுகளும் , மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சேந்தன் தலைமையிலான அணிகளும் தீவிரமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply