“கொரோனா” வைரஸின் பறவை காரணமாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகாலநிலை அமுலுக்கு வந்துள்ளது.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து வழிவகைகளை கையாளப்படுமென மாநிலத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்கத்தினால் கலிபோர்னியாவில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், 9400 பேர் தீவிர கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
“கொரோனா” வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளதாகவும் பிறிதொரு செய்தி தெரிவிக்கிறது.