கல்லடியில் விபத்து ஒருவர் பலி! ஒருவர் காயம்!

You are currently viewing கல்லடியில் விபத்து ஒருவர் பலி! ஒருவர் காயம்!

மட்டக்களப்பு கல்லடியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி  உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு.தலைமையக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவர் என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டு. நகர் லேடி மெனிங் வீதி ஊடாக கல்லடி பாலத்து சந்தியில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்தபோது காத்தான்குடி பகுதியில் இருந்து நகரை நோக்கி பயணித்த பேருந்து கல்லடிபால சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply