கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!!

You are currently viewing கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!!

உயிரியல் பிரிவில் சாதனை படைத்த இரட்டையர்கள்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!! 1

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

சி.ஜமுனானந்தா பிரணவன் (முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்) ஆகிய இருவருமே இவ்வாறு உயர்தரத்தில் சாதணை படைத்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவர்களின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணிதத் துறையில் சாதனை படைத்த ஹாட்லி

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!! 2

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன.

அந்தவகையில் கணிதத்துறையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி (Hartley College) மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

அந்த பாடசாலையின் மாணவனான கந்ததாசன் தசரத் என்பவரே இவ்வாறு கணிதத் துறையில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் முதலிடம்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!! 3

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனான வியாகர்ணன் பிரவீன் மாவட்ட ரீதியாக முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியாக 97வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஏ சித்தியையும், தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானத்தில் ஏ சித்தியையும், இயந்திரவியல் தொழில்நுட்பத்தில் பி சித்தியையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

கலைப் பிரிவில் முதல் இடம்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!! 4

உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்  (26.04.2025) வெளியாகின.

அதில் கலைப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா என்ற மாணவி, தமிழ், அரசியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 3A சித்திகளை பெற்றுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 94ஆவது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.

விஞ்ஞானப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் சாதனையாளர்!! 5

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மாணவி விக்னேஸ்வரன் நர்த்திகா விஞ்ஞானப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

சனிக்கிழமை (26) மாலை க.பொ.த (உயர்தரப்) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply