காங்கோசன்துறையில் 403 கிலோ கஞ்சா மீட்பு

You are currently viewing காங்கோசன்துறையில்  403 கிலோ கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட 403 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்பில் டீராந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டடிருந்த கடற்படையினர் நேற்று இந்த கஞ்சா தொகையினை கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை யாழ்ப்பாணம் விசேட காவல்த்துறை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், விசாணைகள் முன்னெடுக்கப்பட்டடிருந்தன.

இதன்போது, குறித்த கஞ்சா தொகையினை நாட்டுக்கு கொண்டுவந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை – வசந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபரிடம் இருந்து மேலும் 2 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா தொகையும் மீட்கப்பட்டுள்ளதுடன், படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை காங்கேசன்துறை காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள