மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. நிலம், சுரங்களை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கோவின் இடுரி மாகாணம் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர். மேலும், கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்து சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.