காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர் அல் பலாக் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகள் மீட்பு, போரை நிறுத்துவது தொடர்பாக காசா மக்களின் பிரதிநிதிகளான ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை
காசாவில் உள்ள 27 சுகாதார நிலையங்கள் மீது 136 இஸ்ரேலிய தாக்குதல்களை ஐ.நா பதிவு செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்(Volker Türk) கூறியுள்ளார்.
இந்த தாக்குதலடகள் குறிப்பிடத்தக்க மரணம் மற்றும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனிய குழுக்கள் இராணுவ நோக்கங்களுக்காக இத்தகைய வசதிகளைப் பயன்படுத்துகின்றன என்று இஸ்ரேல் அடிக்கடி கூறினாலும், இஸ்ரேல் அந்தக் கூற்றுக்களை ஆதாரங்களுடன் விளக்கவில்லை என வோல்கர் கவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் இந்த கூற்றுகளில் பலவற்றை உறுதிப்படுத்த போதுமான தகவல்களை வழங்கவில்லை என்றும், அவை பெரும்பாலும் தெளிவற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேல் வழங்கிய தகவல்கள், தாக்குதல் நிலைகளுடன் முரண்படுவதாகவும் வோல்கர் தெரிவித்துள்ளார்.