போரை இப்போது நிறுத்த முடியாது, காசாவில் தாக்குதலை தொடர்வோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்தார்.
நிருபர்கள் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியதாவது, நாங்கள் இப்போது போரை நிறுத்தினால் ஹமாஸ் மீண்டும் வந்து தாக்கலாம்.
இது நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. போரை இப்போது நிறுத்த முடியாது. காசாவில் தாக்குதலை தொடர்வோம்.
ஹமாஸை அழித்தொழித்தல் மற்றும் அதன் இராணுவ மற்றும் நிர்வாகத் திறன்களை ஒழித்தல் என்ற இலக்கை நிர்ணயித்து உள்ளோம்.
இந்த இலக்கை நாங்கள் இன்னும் முழுமையாக அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் நடைபெற்றும் வரும் நிலையில், போரை நிறுத்த மாட்டேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.