இஸ்ரேல்-காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக முவாசி நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு மருத்துவமனை சேதமடைந்தது. இதில் டாக்டர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.