கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய நாள் சனிக்கிழமை(19) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்திய தேவைகளுக்காக மனுவல் உதயச்சந்திரா நேற்று மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சென்ற நிலையில் அவரை கைது செய்ய சிறீலங்கா காவற்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் ”மனுவல் உதயச்சந்திராவை கைது செய்யவே வந்துள்ளோம். அவர் வருகை தந்தவுடன் உடனடியாக சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு அழைத்துவருமாறு” உறவினர்களிடம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.