அடிப்படை வசதிகளும் இல்லாமல் குடிசையில் வீட்டிலேயே கடைசி வரைக்கும் காணாமல்போன தன் பிள்ளையை தேடிக் கொண்டிருந்த தாய் ஒருவா் உயிாிழந்த சம்பவம் கிளிநொச்சியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் 23 வயதில் இறுதி யுத்த்ததில் பிள்ளையை தொலைத்த தாய் உயிாிழந்துள்ளாா். சின்னையா கண்ணம்மா என்ன 77 வயதான இந்த தாய், பிள்ளையையும் காணாது 10 ஆண்டுகளாக
அடிப்படை வசதிகள் எதுவமற்ற வாழ்வினைகழித்து உயிர் நீத்த சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 23 வயதான தனது கடைசி மகனை் சின்னையா பிரசாந் என்பர் இன்று வருவார், நாளை வருவார் என போராட்டங்களிலும், விசாரணைகளிலும் தேடி அலைந்த நிலையில் தனது 10 ஆண்டு எஞ்சிய காலத்தையும் நிம்மதியற்று கழித்தவளாக கண்ணயர்ந்தாள் கண்ணம்மா. குறித்த தாயின் கணவர் றந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில்,
கண்ணம்மாவின் மறைவும் குடும்பத்தை மாத்திரமல்ல பிரதேசத்தை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நிம்மதியாக உறங்குவதற்கு நிரந்தர வீடுகூட அற்ற நிலையில், பிள்ளைகள் மற்றம் உறவினர்களின் சிறு உதவிகளுடன் தனக்கான வருமானத்திற்காக
கோவில்களில் கச்சான் விற்று உயரை பிடித்து மகனை தேடிய நிலையில், மகனை காணாதவளாகவே தன்னுயிரை இழந்துள்ளாள் இந்த தாய். வெறுமனே வீர வசனங்களை மேடைகளில் பேசியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து
அரசியல் செய்தவர்களும்கூட இந்த தாயாரிற்கு உதவ முன்வந்திருக்கவில்லை. 5 ஆண்டுகளாக அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவினை கொடுத்து, உரிமைக்காகவு்ம, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்காகவும் போராடும் மக்களை மறந்தவர்களின் கண்களிற்கு இந்த தாயாரின் இருப்பிடத்தைகூட அமைத்துக்கொடுக்க முடியவில்லை.