காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு இறப்புச் சான்றிதழ்: முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் கோத்தா!

  • Post author:
You are currently viewing காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு இறப்புச் சான்றிதழ்: முழுப் பூசனிக்காயை  சோற்றுக்குள் மறைக்கும் கோத்தா!

போா்க் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உயிாிழந்துவிட்டாா்கள் என கூறியிருக்கும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டபாய அவா்களுக்கான இறப்பு சான்றிதழை பெறுபவதே பொருத்தமானதாக இருக்கும் என கூறியுள்ளாா்.

ஊடக ஆசிாியா்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்

போர்க்காலத்தில் வடக்கில் மாத்திரமன்றி தென் பகுதியிலும் பலர் காணாமல்போயிருந்தார்கள். எனவே, போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்.

எனினும், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் என்னால் உணர முடிகின்றது. இதனாலேயே காணாமல்போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.எனவே, காணாமல்போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும்- என்றார்.

பகிர்ந்துகொள்ள