வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை!

You are currently viewing வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராட்டத்தில் ஈடுபடும் தாயிடம் பொலிஸார் விசாரணை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி  நீண்டகால தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்த் தாய்,புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பிய குற்றச்சாட்டின் கீழ் சிறீலங்கா காவற்துறையில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அம்பாறை அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, திருக்கோவில் சிறீலங்கா காவற்துறை நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு கடந்த 8ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தார்.

சிறீலங்கா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் (CTID) தலைமையகத்திற்கு கடற்படை மற்றும் இராணுவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய சிறீலங்கா காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய கோவை, சீருடை அணிந்திருந்த சிறீலங்கா காவற்துறை உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டிருந்ததோடு, தன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளும் அந்த அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்ததாக தம்பிராசா செல்வராணி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments