சிறீலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், இரண்டு மகவுகளையும் தேடிக்கண்டறியும் வவுனியா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய திருமதி அன்னலட்சுமிக்கு, நோர்வே புலம்பெயர் வாழ் தமிழ் உணர்வாளரால் ‘ஒரு இலட்சம் ரூபாய்’ நிதி வாழ்வாதாரத்துக்கும், அவரது பிள்ளைகளின் கல்விக்குமாக பகிர்ந்து வழங்கப்பட்டது.

‘தமிழ்முரசம் வானொலி சேவை’ ஊடாக கிடைக்கப் பெற்ற குறித்த உதவிக்கு, ‘தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர்’ தமது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றனர்.