கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடபட்ட வடக்கின் நான்கு மாவட்டங்களுக்கான காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நடைமுறைபடுத்தபடுமானால் அரசை ஸ்தம்பிக்க செய்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும், முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் ஆவணங்களை இழந்த மக்களின் துயர் அறிந்து வர்த்தமானியை அரசு மீள பெறவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி விசேடமாக காணிகளை குறிவைத்து அரச காணி அல்லாத தனியார் காணிகள் அனைத்தும் அடையாளம் காணுகின்ற நோக்கில் அரசு அடிப்படை முயற்சிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பிரித்தானிய இராச்சிய காலத்தில் பிரித்தானிய அரசு காணிகளை தமக்கு கீழ் கொண்டுவர கொண்டுவந்த சட்டத்தை பயன்படுத்தி இன்று இந்த வர்த்தமானி அவசரஅவசரமாக இந்த வர்த்தமானி வெளிவந்திருகின்றது.
எமது நாட்டிலே கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை பூதாகரமாக வளர்த்து விடபட்டு, பின்னர் இப்போராட்டம் அரசினால் பயங்கரவாதமாக கொச்சைபடுத்தபட்டு பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவரபட்டது.
இருந்தும் இது போன்ற பல்வேறு சட்டமூலங்களை வைத்து கொண்டும் இந்த வர்த்தமானி தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களின் அரைவாசி நிலப்பரப்பில் இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் மக்கள் யுத்தகாலங்களில் அன்று அவசரமாக வெளிக்கிட்டு இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் .
இவ்வாறான நிலையில் வடக்கில் வவுனியா மாவட்டத்தை தவிர ஏனைய கிளிநொச்சி , மன்னார் ,வவுனியா , முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் தனியார் காணிகள் நிரூபிக்க முடியாது வெளியிடபட்டுள்ளன.” என்றார்.