காணி பறிப்பிற்கு எதிராக மண்டை தீவில் போராட்டம்!

You are currently viewing காணி பறிப்பிற்கு எதிராக மண்டை தீவில் போராட்டம்!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் சிறீலங்கா காவல்த்துறையினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மண்டைதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர்.
இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர். இதன் போது காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில் காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள