காதலியை கொன்ற கனேடிய கால்பந்தாட்ட நட்சத்திரம்! – 12 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்!

You are currently viewing காதலியை கொன்ற கனேடிய கால்பந்தாட்ட நட்சத்திரம்! – 12 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்!

பிரிட்டிஷ் கொலம்பியா பெண்மணியை கொலை செய்த வழக்கில் முன்னாள் கனேடிய கால்பந்து நட்சத்திரம் குற்றவாளி என பொலிசாரால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீது 2ம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. BC Lions என்ற கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த ஜோசுவா போடன் என்பவரே கொலைக் குற்றவாளி என வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார்.

2009ல் தமது காதலியின் மரணத்துடன் தொடர்புடைய வழக்கில் சிக்கியிருந்த ஜோசுவா போடன் மீது தற்போது 2ம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் போடன் மீதான தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என இந்த மாத இறுதியில் தெரியவரும் என அரசு தரப்பு சட்டத்தரணிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ல் பேணபே பகுதியில் அமைந்துள்ள தமது குடியிருப்பின் வாசலில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே விசாரணை அதிகாரிகளால் கொலை வழக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெளிப்படையாகவே போடனை கொலைக் குற்றவாளி என விசாரணை அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது. இந்த வழக்கின் தொடக்க விசாரணை நாட்களில் போடன் மீது எந்த சந்தேகமும் இல்லை என்றே பொலிஸ் தரப்பு கூறி வந்தது.

அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பு கூறி வந்தது. நீண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார், தற்போது போடன் மீது கொலைக் குற்றம் சுமத்தியுள்ளது.

2009ல் வான்கூவர் ரயில் நிலையத்தில் வைத்து இரண்டு பெண்கள் மீது போடன் அத்துமீறியதாக கூறி புகார் அளிக்கப்பட்டது. இதில், அவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. தொடர்ந்து வருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply