காதல் தோல்வி ; காதலனை பழிவாங்க 1000 கிலோ வெங்காய மூட்டைகளை அனுப்பி வைத்த காதலி!

  • Post author:
You are currently viewing காதல் தோல்வி ; காதலனை பழிவாங்க 1000 கிலோ வெங்காய மூட்டைகளை அனுப்பி வைத்த காதலி!

சீனாவில் இன்று மே 20 ம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது, தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழ வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண்.

சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது நீண்ட நாட்களாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உடனே 1000 கிலோ வெங்காயத்தை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அதில் ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது.

பகிர்ந்துகொள்ள