காத்தான்குடி – நூராணியா பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் கைது!!

You are currently viewing காத்தான்குடி – நூராணியா பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் கைது!!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிகுட்பட்ட நூராணியா பகுதியில் 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காத்தான்குடி சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

 

அந்த பகுதியில் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்  போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 10,700 ரூபாய் பணம், 5 வங்கிகளின் ATM அட்டைகள், போதைப் பொருளை தரம் பிரிக்கும் இயந்திரம், கைப்பை உட்பட பல பொருட்கள்  சிறீலங்கா காவற்துறையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (01) ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply