ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் (Kabul) சர்வதேச மனிதாபிமான அமைப்பான Médecins sans frontières (M.S.F) நடத்தும் டாஷ்-இ-பார்சி மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் போலீஸ் சீருடையில் இருந்தனர். தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு தாங்கள் காரணம் அல்ல என தலிபான்கள் மறுத்துள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tariq Arian கூறியதாவது:-
செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர், 45 பேர் காயமடைந்தனர் மற்றும் 80 நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். சிறப்புப் படைகள் மீதமுள்ள அனைத்து நோயாளிகளையும் ஊழியர்களையும் மீட்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என கூறினார்.